Tuesday, 16 July 2013

வாழ்ந்த புலிகளோ


சோறு நிறைக்கும்   சுருங்கா  வயிற்றுடன்  சில 

ஊரார்   இருந்தாலும்  சேறில்  ஊறார் சிறுபயிர் 

ஊணார் செவ்வயல் காணார் விடுதலை போரில் 

மாணார்மானிடம் பேணார்!   மரித்த வேளையில் 

ஊணாய்  தெரிவார்..தேசமே பெரிதென 

வாழ்ந்த புலிகளோ தமிழ் வரலாற்றின் சுவாசமே.... 

Monday, 25 February 2013

உரிமைப் போரில் எரிந்த உயிர்கள்


சொல்லி அழ யாருமில்லை... அவர்

சோகம் சொல்ல வார்த்தையில்லை

கொத்துக் குண்டில் தப்பவில்லை

கொள்ளி வைக்க யாருமில்லை

முள்ளி வாய்க்கால் முழுதும் ரத்தம்...  

சொல்லும்

மெல்லஉயிர் பிரிந்த சத்தம்.......  

 

நல்லக் கஞ்சி குடித்தாரில்லை - அவர்

நாவின் சுவைக்கடிமை யில்லை - பஞ்சு

மெத்தையிலே படுத்தா ரில்லை  

ஒத்தையிலே வாழ்ந்த உடல்கள்

உரிமைப் போரில் எரிந்த உயிர்கள்.....

Monday, 4 February 2013

மாறாத காடையர்..


சாட்சிய மற்ற

சமநிலை யற்ற

சமரில் மடிந்த

சிங்கங்களை ...

அவிழ்த்துப் பார்த்த

சிங்கள அசிங்கங்களே....

நுமக்கு சீருடை எதற்கு?

நும்சிறு கோழைச்செயல் நாணி

சீருடையும் சினம்கொள்ளும்

சிந்தனையும் நாறும்...

அந்த

வீரச்செயலை விசாரிக்கும்

பன்னாட்டு விசாரணைக்கு

பயம் எதற்கு?

உத்திரத்தில் இருக்கு

ஒருநாள்

உமக்கும் ஒரு சுருக்கு!!!

Tuesday, 22 January 2013

களத்தில் மடியாக் கனவுகள் ...

சிங்கள நாய்களால்
சிதைக் கப்பட்டாலும்
சிதைக் காணாமலே
சிதைந்த உடல்களின்
சிந்தியக் கனவுகள் - நாளை
செவ்வனே ஈழத்தில்
சிதையாமல்முளைக்கும் 
சிந்தையில் வையுங்கள்..
 

Tuesday, 15 January 2013

மனச்சிதையில் உயிர்ப்பவர்கள்

விடியலுக்காக வெந்து மடிந்த
முள்ளி வாய்க்காலின்
ஈக்கள் மொய்க்கும்
ரணங்களோடு பிணங்கள்,
இதயத்தைத்  தாக்கும்
இறந்தாலும் கேட்கும்
விடுதலை!!!...
 

Tuesday, 1 January 2013

பாவம் அவள் தமிழச்சி

 
டெல்லியில்
ஒருத்தியின்
துயரத்தில்
உலகமே
அழுதது
ஈழ உலகமே
துயரத்தில் - ஏன்
உலகமோ
மௌனத்தில்?
பாவம்
அங்கே
தாராளமாய்
சிதைத்தவன்
சிங்களன்தானே
சீரழிந்ததோ
ஏராளம்
தமிழச்சிகள்தானே.

Monday, 10 December 2012

ஈழத்தின் அழு குரல்

ஓ... பான் கீ மூன்..?

ஈழத்தார் அழுதகுரல் கேட்கிலயோ ? உமக்கு
எதுவும் செய்யவழி தெரியலையோ? நீங்கள்
உலகத்தலைமகனோ ? உதவாக்கரை விலைமகனோ ?

சரித்திரத்தில் ஆகிவிட்டீர் உண்மையின் கொலைமகனாய் !!!.

மானிடம் பேணும் மாண்பு மறைந்தவரா ? - மனசாட்சி
இறந்தவரா? மதிநலன் சிதைந்தவரா? இனவெறியின்
வலிதெரியா இதயத்தாரோ? நீவீர் யாரோ? வெறும்
நீலிவேசம் போடும் டிராகுலாவோ ? ஈழத்தார்

காணிடம் அனைத்தும் உடல்கள் சிதைந்ததை
கண்டபின்னும் அமைதி காத்த - உம்மை
மனிதனாக வேனினைக்க மறுக்கின்றதே!!! மனம்
சூனியனாக வேனினைத்து ஒதுக்கின்றதே!!!