Monday, 25 February 2013

உரிமைப் போரில் எரிந்த உயிர்கள்


சொல்லி அழ யாருமில்லை... அவர்

சோகம் சொல்ல வார்த்தையில்லை

கொத்துக் குண்டில் தப்பவில்லை

கொள்ளி வைக்க யாருமில்லை

முள்ளி வாய்க்கால் முழுதும் ரத்தம்...  

சொல்லும்

மெல்லஉயிர் பிரிந்த சத்தம்.......  

 

நல்லக் கஞ்சி குடித்தாரில்லை - அவர்

நாவின் சுவைக்கடிமை யில்லை - பஞ்சு

மெத்தையிலே படுத்தா ரில்லை  

ஒத்தையிலே வாழ்ந்த உடல்கள்

உரிமைப் போரில் எரிந்த உயிர்கள்.....

Monday, 4 February 2013

மாறாத காடையர்..


சாட்சிய மற்ற

சமநிலை யற்ற

சமரில் மடிந்த

சிங்கங்களை ...

அவிழ்த்துப் பார்த்த

சிங்கள அசிங்கங்களே....

நுமக்கு சீருடை எதற்கு?

நும்சிறு கோழைச்செயல் நாணி

சீருடையும் சினம்கொள்ளும்

சிந்தனையும் நாறும்...

அந்த

வீரச்செயலை விசாரிக்கும்

பன்னாட்டு விசாரணைக்கு

பயம் எதற்கு?

உத்திரத்தில் இருக்கு

ஒருநாள்

உமக்கும் ஒரு சுருக்கு!!!